• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2010ம் ஆண்டு சீன அரசின் பணியறிக்கை
  2010-03-05 12:22:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் அதியுயர் அதிகார அமைப்பான தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர், 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூட்டத்தில் சுமார் 3000 தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளிடம் அரசின் பணியறிக்கையை வழங்கினார். சீனா சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பிலிருந்து விடுபட்டு பொருளாதார மறுமலர்ச்சியை நனவாக்குகின்ற பின்னணியில், இப்பணியறிக்கை, நெருக்கடிக்குப் பிந்தைய சீனாவின் வளர்ச்சி நெறிவரைத் திட்டத்தை வெளிப்படுத்தியது. அதேவேளை, வீட்டு விலைவாசி, வருமானம், மருத்துவச் சிகிச்சை முதலிய சீன மக்கள் அதிகமான கவனம் செலுத்துகின்ற பிரச்சினைகளுக்கு இப்பணியறிக்கை பதிலளித்து, விரிவான தீர்வு நடவடிக்கைகளை முன்வைத்தது. இது, மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக இணக்கம் மீதான அரசின் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

20 ஆயிரம் எழுத்துகள் அடங்குகின்ற இவ்வறிக்கை, உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார நிலைமையை இணைக்கிறது. ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை சீராக மேற்கொண்டு பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தையும் கட்டுக்கோப்பின் சரிப்படுத்தலையும் விரைவுபடுத்துவது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி சமூக இணக்கத்தை முன்னேற்றுவது முதலியவை, இவ்வாண்டு அரசின் முக்கிய கடமைகளாகக் கொள்கிறது. துணிவுடன் அறைகூவல்களைச் சமாளித்து பிரச்சினைகளைத் தீர்க்கின்ற சீன அரசின் மனவுறுதியையும் நம்பிக்கையையும் இந்த பணியறிக்கை வெளிப்படுத்துகிறது.

பொருளாதர வளர்ச்சியை நிலைநிறுத்தி, கட்டுக்கோப்பை சரிப்படுத்தி, சீர்திருத்தத்தை முன்னேற்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்ற பல நடவடிக்கைகளை சீன அரசு 2009ம் ஆண்டில் வெளியிட்டது. அது, பொருளாதார அதிகரிப்பு குறையும் நிலையை விரைவாக மாற்றி சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பைச் சமாளிக்க உதவியது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னணியில், சீனப் பொருளாதர அதிகரிப்பு விகிதம் 8.7 விழுக்காட்டை எட்டியது.

கடந்த ஆண்டின் அரசின் பணியறிக்கை முன்வைத்த பல்வகை வளர்ச்சி இலக்குகளும் பொதுவாக நனவாக்கப்பட்டுள்ளன. சீன பொருளாதாரத்தின் வலிமையான வளர்ச்சி, உலகப் பொருளாதார மறுமலர்ச்சியின் மிக வலுவான உந்து சக்தியாக மாறியது.

பல உறுதியற்ற சிக்கல்களை எதிர்நோக்குகின்ற போதிலும், சீன அரசு இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி மீது தொடர்ந்து நம்பிக்கையைக் கொள்கிறது. தவிர, தெளிவான வளர்ச்சி இலக்கையும் வகுத்துள்ளது. அதாவது, உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 8 விழுக்காடு அதிகரிப்பது, வேலை இழப்பு விகிதம் 4.6 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தப்படுவது, நுகர்வு விலைவாசியின் அதிகரிப்பு 3 விழுக்காட்டுக்குள் இருப்பது முதலியவையாகும். இந்த இலக்குகள் குறித்து, வென்சியாபாவ் கூறியதாவது,

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040