• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மறக்க முடியாத கூட்டத் தொடர்
  2010-03-13 13:54:08  cri எழுத்தின் அளவு:  A A A   
பத்து நாட்கள் நடைபெற்று 13ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரின் கலந்தாய்வில் 2000க்கும் மேற்பட்ட மாநாட்டின் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பங்கெடுத்து வேறுபட்ட கருத்துருக்களை முன்வைத்து திட்டத்தின் படி பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை இனிதே நிறைவேற்றினர். கூட்டத் தொடரின் போக்கை மீளாய்வு செய்கையில் புதிய உறுப்பினர்கள், பொது மக்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் புதிய வழிமுறை, அரசியல் விவகாரங்களில் ஈடுபடும் புதிய எண்ணம் முதலியவை நடப்பு கூட்டத்தில் காணப்பட்ட புதிய வளர்ச்சித் தோற்றமாகும் என்பதை கண்டறியலாம்.
 
சீன அரசியல் அரங்கில் முதல்முறையாக தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட திபெத் மரபுவழி புத்தமதத் தலைவரான 11வது பஞ்சன் Erdeni Qoigyi Gyaibo நடப்பு கூட்டத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்த புத்தமத நபராவார். 20 வயதான பஞ்சன் லாமா இவ்வாண்டு பெப்ரவரி திங்களில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இந்த முறை ஆண்டு கூட்டத் தொடர்களில் கலந்து கொண்டு பல புதிய அனுபவங்களை பெற்றேன். மற்ற உறுப்பினர்களிடமிருந்து கற்றுக் கொண்டு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அவர் தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.
 
மதத் துறையின் குழுக் கூட்டத்தில் பஞ்சன் லாமா கலந்து கொண்டு மாநாட்டின் உறுப்பினரின் கடப்பாடு பற்றி உணர்ந்ததை விளக்கிக் கூறினார். பொது மக்கள் சந்தித்த இன்னல்களை நடைமுறைக்கேற்ப வெளிப்படுத்த வேண்டும். அதேவேளையில் கட்சி மற்றும் அரசின் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
நடப்புக் கூட்டத் தொடரில் மொத்தம் ஐயாயிரம் கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன. நாடு, பிரதேசம், துறைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உத்திநோக்கு மற்றும் முன்னோக்கு தன்மை வாய்ந்த கருத்துருக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல உறுப்பினர்கள் கரி குறைந்த வளர்ச்சி பற்றி புதிய எண்ணங்களை முன்வைத்தனர். மாநாட்டின் உறுப்பினரும் புகழ் பெற்ற பொருளியலாருமான li dao kui கூறியதாவது. கரி குறைந்த பொருளாதாரம் என் சொந்த கருத்தில் தேசிய கொள்கையாக உயர்த்தப்பட வேண்டும். இது பற்றி நிதி, நாணய உதவி உள்ளிட்ட கொள்கைகளை வெளியிட வேண்டும். தொழில் நிறுவனங்களையும் பல்வேறு நகரங்களையும் கரி குறைந்த வளர்ச்சிப் பாதையை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இந்த வளர்ச்சிப் பாதையில் எங்கள் பொருளாதார வளர்ச்சித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.
 
நடப்பு நிறைவு கூட்டத்தில் மாநாட்டின் தேசிய கமிட்டியின் தலைவர் ஜியாச்சிங்லின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் புதிய ஆண்டு பணிக்குத் தெளிவான திசையில் வழிகாட்டினார். சுருங்கக் கூறினால் மக்களுக்கு நலன் தந்து சமூக இணக்கத்துக்குப் புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040