• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொது மக்களின் இன்பமும் மதிப்பும்
  2010-03-14 15:37:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் ஒன்பதரை நாட்கள் நடைபெற்று 14ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. மாநாட்டின் சுமார் மூவாயிரம் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் கருத்துருக்களை முன்வைத்தனர்.

நாம் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் பொது மக்கள் மேலும் இன்பமாகவும் மேலும் மதிப்புடனும் வாழச் செய்வதற்கானவை ஆகும். சமூகம் மேலும் நியாயமாகவும் மேலும் இணக்கமாகவும் அமையச் செய்வதும் ஆகும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் துவக்க விழாவில் கூறிய போது கூட்ட மண்டபத்தில் உளமார்ந்த கரவொலி எழும்பியது. மக்களுக்கென இன்பம் மற்றும் மதிப்பை நாடுவது சீன அரசு சளையாமல் தேடி கொண்டிருக்கும் முயற்சியாகும். பொருளாதாரம் இதை நிறைவேற்றுவதற்கான அடிப்படையாகும். இது குறித்து சீனாவில் புகழ் பெற்ற அறிஞர் qin xiao yingகூறியதாவது--

பொருளாதார வளர்ச்சியின் வடிவம் மாறுவது முதன்முதலில் பொது மக்களுக்கு நன்மை தரும். குறைந்த வருமானம் பெறும் பொது மக்களின் வாழ்க்கைத் தரம் செழுமையடைந்தால் மக்களின் மதிப்பு மற்றும் இன்பம் பெரிதும் அதிகரிக்கும். ஆகவே பொருளாதார வளர்ச்சி வடிவத்தை மேம்படுத்துவது இன்பம் என்ற பாலத்தை நோக்கிச் செல்லும் வழிமுறையாகும் என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி பெய்ஜிங் மாநகரில் வாழ்கின்ற திரு zhu கூறியதாவது--

அரசுப் பணியின் இலக்கு மக்களின் இன்பம் மற்றும் மதிப்புக்கானது என்ற கருத்து பொது மக்களின் வேண்டுகோளை உண்மையாக பிரதிபலிக்கின்றது. இப்போது நான் வீடு வாங்கவில்லை. உறை விட பரப்பளவை விரிவாக்க அரசு வாக்குறுதியளித்தது. இதில் நான் நலன் பெறலாம். அரசு விரைவுப்படுத்திய மருத்துவச் சீர்திருத்தமும் நான் தாங்கிகொண்ட சுமையை பெரிதும் குறைக்கலாம். எதிர்காலத்தின் மீது மேலும் பெரும் நம்பிக்கை கொள்கின்றேன் என்று திரு zhu கூறினார்.

மக்கள் மேலும் இன்பமாகவும் மதிப்புடனும் வாழச் செய்வது சீன அரசு உறுதிபட அளித்த வாக்குறுதியாகும். இது சீன மக்கள் அனைவரின் விருப்பமும் ஆகும். இந்த இலக்கை நிறைவேற்றும் பாதை கடினமானது. கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் அனைவரும் நாட்டின் ஆற்றலை குவிந்து வெளிப்படுத்தினால் அவர்களின் வாழ்க்கை மேலும் இன்பமாகவும் மதிப்புடனும் மாறுவதை நிறைவேற்றுவதில் எந்த ஐயமும் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040