16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 12ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கும். 45 ஆசிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 9704 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வர். இவ்வெண்ணிக்கை, முந்தைய எந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும் விட மிக அதிகமாகும் என்று ஆசிய ஒலிம்பிக் குழு 10ம் நாள் அறிவித்தது.
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிப் பிரதிநிதிக்குழுத் தலைவர்கள் கூட்டம், 10ம் நாள் குவாங்சோ நகரில் துவங்கியது. பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள் பதிவு செய்துள்ள தத்தமது விளையாட்டு வீரர் எண்ணிக்கையை உறுதிப்படுத்தின.