• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அரசியல் கட்சிகளின் சிறப்புக் கூட்டம்
  2011-09-05 10:48:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் நான்னிங்கில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதிநிதி சுகுமார் நம்பியார் 4ம் நாள் சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். ஆசிய அரசியல் கட்சிகளின் சிறப்புக் கூட்டம் பல்வேறு கட்சிகளுக்கிடை பரிமாற்றத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவும் சீனாவும் ஈராயிரம் ஆண்டு வரலாறுடைய நாடுகளாகும். உலகில் மிகப் பெரிய வளரும் நாடுகளான அவை, ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். முன்பு சீனா பற்றி சிறப்பாக அறிந்து கொள்ளவில்லை. இந்த முறை சீனாவின் சமூக வளர்ச்சியை நேரில் கண்டு, மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைவதாகவும் நம்பியார் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040