• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்காளதேசத்தில் டாட்டா நிறுவனத்தின் நானோ சீருந்துகள்
  2011-10-17 14:39:40  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல், இந்திய டாட்டா நிறுவனம் தயாரிக்கும் நானோ வாகனங்கள் வங்காளதேசத்தில் விற்பனைக்கு வரவுள்ளது என்று வங்காளதேசத்தின் 24மணிநேர செய்தி என்னும் இணையதளம் தெரிவிக்கின்றது.

அண்மையில், வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நடைபெற்ற வீடு மற்றும் வாகனக் கடன் பற்றிய காட்சிச் சந்தையில், வங்காளதேசத்திலுள்ள ,டாட்டா நிறுவனத்தின் ஒரே ஒரு விற்பனை நிறுவனமான நிதோநிலோ குழுமத்தின் இயக்குநர் அபுதுல்·மதுலுபு·ஐகாமைது இத்தகவலை வெளியிட்டார்.

வங்காளதேசத்தில், டாட்டா நானோ வாகனத்தின் விலை சுமார் 59ஆயிரத்து 900 ரென்மின்பி யுவானாகும். வங்காளதேசத்தில் இவ்வாகனங்களின் விற்பனை அளவை அதிகரிக்கும் வகையில் அதன் விலையில் டாட்டா நிறுவனம் மேலும் சலுகை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040