• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பல தரப்பு தூதாண்மை அரங்கில் சீனா
  2011-10-25 11:28:53  cri எழுத்தின் அளவு:  A A A   
40 ஆண்டுகளுக்கு முன், சீனா இன்னல்கள் பலவற்றைச் சமாளித்து, ஐ.நாவில் மீண்டும் சேர்ந்தது. அப்போது முதல், பல தரப்புத் தூதாண்மை அரங்கான ஐ.நாவில், சீனா பல்வகைப் பணிகளில் ஈடுபட்டு, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும், மனிதக் குலத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நியூயார்க் நேரப்படி இவ்வாண்டு அக்டோபர் 4ஆம் நாளிரவு, சிரியாவை கண்டிப்பது தொடர்பான வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பினால், இவ்வரைவுத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எதிர்ப்புக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடுகையில், ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி லீ பௌதுங் கூறியதாவது—

"இன்று பரிசீலித்த இந்த வரைவுத் தீர்மானம் பற்றி பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் பலவற்றுடன் சீனா ஒத்த கருத்து கொண்டது. தற்போதைய நிலையில், தடை நடவடிக்கை மேற்கொள்வது அல்லது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக அச்சுறுத்துவது, சிரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் துணைபுரியாது. இதற்கு மாறாக அதன் நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாக, முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி வாக்களிப்பது, சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய வழிமுறையாகும். என்ன வரையறையின்படி வாக்களிப்பது என்பது குறித்து, Peking பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு கழகத்தின் துணைத் தலைவர் வாங் யீசோ கூறியதாவது—

"முதலில், இத்தகைய பிரச்சினைகளிலும் வளர்ச்சிப் போக்கிலும் தனது நலனை பேணிக்காக்க முடியுமா என்பதை சீனா கருத்தில் கொள்கிறது. இரண்டாவதாக, பெரும்பாலான நாடுகள், குறிப்பாக பிரச்சினையுடன் தொடர்புடைய அண்டை நாடுகளின் நலனை சீனா கருத்தில் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, சர்வதேசச் சமூகத்தின் பெரும்பாலான நாடுகளின் கணிப்பு மற்றும் பிரச்சினையின் உண்மை நிலைக்கிணங்க வாக்களிப்பு வரையறையை சீனா உறுதிப்படுத்தும்" என்று அவர் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளாக, கலந்தாய்வு, பேச்சுவார்த்தை உள்ளிட்ட அமைதி வழிமுறை மூலம் சர்ச்சை மற்றும் மோதலைத் தீர்ப்பதில் சீனா உறுதியாக நின்று வருகிறது. வட கொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினை, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை உள்ளிட்ட உலக மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பலவற்றைக் கையாளும் போக்கில், முக்கியமான செயலாக்க பங்காற்றியுள்ள சீனா, சர்வதேசச் சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அமைதி நிலைப்பாடு தவிர, சர்வதேச விவகாரங்களில் நடைமுறை நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டுள்ளது. ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கையில் ஆக்கமுடன் கலந்து கொண்ட சீனா, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை ஐ.நாவுடன் இணைந்து பேணிக்காத்து வருகிறது.

ஐ.நாவின் முக்கியமான மனித உரிமைத் துறையிலும், சீனா பெரும் பங்காற்றியுள்ளது. ஐ.நா. பொது பேரவை, மனித உரிமை ஆணையம், மனித உரிமை செயற்குழு உள்ளிட்ட நிறுவனங்களின் பணிகளில் சீனா ஊக்கத்துடன் கலந்து கொள்வதோடு, புறநிலையிலும் நீதி நியாயமாகவும் மனித உரிமைப் பிரச்சினையை ஐ.நா. கையாள்வதையும் முன்னேற்றி வருகிறது.

சர்வதேச விவகாரங்களில் கலந்து கொண்ட சீனா, படிப்படியாக தனது பங்கை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐ.நாவில் சீனா மேலும் பெரும் பங்காற்றி, மேலும் செயலாக்கமுள்ள உறுப்பு நாடாக மாறும் என்று Peking பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு கழகத்தின் துணைத் தலைவர் வாங் யீசோ வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040