• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் உரை
  2011-11-13 10:10:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்கள் உச்சிமாநாடு 12ம் நாள் முற்பகல் அமெரிக்காவின் ஹவாயில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீனாவின் வளர்ச்சி ஆசிய பசிபிக் மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் முக்கிய ஆற்றலாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் சீனப் பொருளாதார வளர்ச்சியின் வாய்ப்பைப் பகிர்ந்து கொள்வதை சீனா வரவேற்பதாகவும், பல்வேறு தரப்புகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றலை அதிகரிக்க விரும்புவதாகவும் ஹு சிந்தாவ் தமது உரையில் தெரிவித்தார். தற்போது உலகப் பொருளாதார மீட்சியில் நிலையற்ற மற்றும் உறுதியற்ற தன்மை அதிகரித்துள்ளது என்று ஹு சிந்தாவ் உரையின் துவக்கத்தில் தெரிவித்தார். ஆகையால் உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டு அமைப்புமுறையை முதலில் மேம்படுத்தி, மேலும் சம நிலையிலான புதிய உலக வளர்ச்சி கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அவர் கூறியதாவது

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமிடையில் ஒன்றை ஒன்று புரிந்து கொள்வதையும் ஒன்றை ஒன்று ஒருங்கிணைப்பதையும் முன்னேற்ற வேண்டும். சர்வதேசப் பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் துறையில் வளர்ந்த நாடுகள் கடமைகளையும் கடப்பாட்டையும் ஏற்று, உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் வளரும் நாடுகளும் சொந்த நாட்டின் நிலைமை, வளர்ச்சிக் கட்டம் மற்றும் தரத்துக்கேற்ப ஏற்கக் கூடிய சர்வதேசக் கடமைகளை ஏற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

வலுவான அதிகரிப்பை நனவாக்கும் பொருட்டு, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து, பிரேதச பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை பல்வேறு தரப்புகள் ஆழமாக்க வேண்டும் என்றும் ஹு சிந்தாவ் வேண்டுகோள் விடுத்தார். சீனாவின் வளர்ச்சி, பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தம் ஆழமாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்தல், வணிக முதலீட்டுச் சூழலை சீனா மேம்படுத்தும் முயற்சி, சீனாவில் மாசற்றப் பொருளாதார வளர்ச்சி முதலியவை பற்றி அவர் எடுத்து கூறினார்.

சீனாவின் சீர்திருத்தம், வெளிநாட்டுத் திறப்பு மற்றும் நவீனமயமாக்கம் முன்னேற்றப் போக்கில் ஆசிய-பசிபிக் தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் ஆக்கமுடன் பங்கெடுத்து சீனப் பொருளாதார வளர்ச்சி கொண்டு வரும் வாய்ப்புகளையும் கனிகளையும்க் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதை சீனா வரவேற்கின்றது. பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து கூட்டாக முன்னேறி, நேர்மையான ஒத்துழைப்பை மேற்கொண்டு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்று ஹு சிந்தாவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040