• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை
  2011-11-14 15:04:20  cri எழுத்தின் அளவு:  A A A   
தடையற்ற, இசைவான பிரதேசப் பொருளாதாரத்தை நோக்கி என்ற Honolulu அறிக்கையை ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 13ஆம் நாள் வெளியிட்டது. அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நலன் தரக்கூடிய இசைவான பிரதேசப் பொருளாதாரத்தை உருவாக்க பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, இவ்வமைப்பின் தலைவர்கள் அறிக்கையில் உறுதி கூறியுள்ளனர்.

வர்த்தக தாராளமயமாக்கத்தை மேலும் தூண்டுவது, உலகப் பொருளாதாரம் நீண்டகால மீட்சி பெறுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்க்க, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதி கூறின. பசுமை எரியாற்றல் வளர்ச்சி இலக்கைக் கூட்டாக நனவாக்கி, எரியாற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது முதலிய வழிமுறைகளின் மூலம், கரி குறைந்த பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்த உறுப்பு நாடுகள் பாடுபடும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040