• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச ஒழுங்குமுறை பற்றி சீனா மற்றும் இந்தியாவின் வேண்டுகோள்
  2013-02-03 17:21:10  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளாக, புதிதாக வளரும் நாடுகள் கூட்டாக மலர்ச்சியடைந்து வருவது, உலகின் கவனத்தை ஈர்க்கிறது. அதேவேளையில், தற்போதைய சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் அமைப்புமுறை அதனால் மாறும் என்று சிலர் கவலைப்படுகின்றர்.

ஜெர்மனியின் மியுனிச் நகரில் பிப்ரவரி முதல் நாளன்று துவங்கிய பாதுகாப்புக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மேற்கூறிய கருத்துக்கள் பற்றி விவாதித்தனர்.

தற்போதுள்ள சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் அமைப்புமுறையை நிலைநிறுத்தும் அடிப்படையில், இம்முறைகள் நியாயமாக வளர்ச்சியடைவதைத் தூண்ட வேண்டும் என்று புதிதாக வளரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் 2ஆம் நாள் "புது வளரும் நாடுகள் மற்றும் உலக நிர்வாகம்" தொடர்பாக நடந்த சிறப்பு விவாதக் கூட்டத்தில், சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட புது வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்

கால ஓட்டத்தோடு, பல்வேறு சக்திகளின் அதிகரிப்புடன், சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் அமைப்புமுறையின் வளர்ச்சியை படிப்படியாக தூண்ட வேண்டும் என்று சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் சொங் தாவ் இக்கூட்டத்தில் கூறினார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விவாதக் கூட்டத்தில் பேசுகையில்,

புதிதாக வளரும் நாடுகள், தற்போதைய சர்வதேச அமைப்புமுறையில் பயன் அடைந்தவை. எனவே, இந்த நாடுகள், முற்றிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள போவதில்லை என்று தெரிவித்தார்.

புதிதாக வளரும் நாடுகளின் வளமை, சர்வதேச அதிகாரத்தில் இடமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த முன்னேற்றப் போக்கு அமைதியாக இருக்க வேண்டும். உலகமயமாக்கம், பன்னாடுகளின் நலன்களை ஒன்றிணைத்துள்ளது என்று சிவசங்கர் மேனன் தனது உரையில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040