ஷீ ச்சின்பிங் பிரிட்டனின் கன்பூஷியஸ் கழகங்களின் நடவடிக்கையில் கலந்து கொண்டார் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 22ஆம் நாள் லண்டன் நகரில் நடைபெற்ற பிரிட்டனின் கன்பூஷியஸ் கழகங்கள் மற்றும் கன்பூஷியஸ் வகுப்புகளின் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உலகில் ஆயிரமாவது கன்பூஷியஸ் வகுப்பினைத் தொடங்கி வைத்தார்.
சீன அரசுத் தலைவர்-பிரிட்டன் தலைமையமைச்சர் பேச்சுவார்த்தை சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமருனும் 21ஆம் நாள் லண்டன் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சியில் பெற்றுள்ள சாதனைகள் பற்றி அவர்கள் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டனர்.