அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு

2017-09-07 16:16:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு வியாழக்கிழமை பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 7ஆவது முழு அமர்வு மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு தொடர்பான ஆயத்தப் பணியை ஆய்வு செய்தது. கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 7ஆவது முழு அமர்வினை இவ்வாண்டு அக்டோபர் 11ஆம் நாள் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு அதே திங்கள் 18ஆம் நாள் நடைபெறுவதெனவும் இதில் முன்மொழியப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்