சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் மீது வெளிநாட்டில் வாழ்கின்ற சீனர்களின் கவனம்

ஜெயா 2017-10-12 11:34:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த 5 ஆண்டுகளாக, சீன பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன், வெளிநாடுகளில் வாழ்கின்ற மேலதிகமான சீனர்கள், சீனாவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்கம், அவர்களைப் பொறுத்த வரை, முக்கியத்துவம் வாய்ந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் மீது வெளிநாட்டில் வாழ்கின்ற சீனர்களின் கவனம்

இத்தாலியிலுள்ள சீன பொது வணிகச் சங்கத்தின் தலைவர் சென்சேங்சி கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிந்தைய இந்த 5 ஆண்டுகளில், சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களுக்கு முன்பு கண்டிராத சிறந்த கொள்கை மற்றும் சமூக சூழலை ஏற்படுத்தியுள்ளது. 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனாவின் மீதான அவர்களது மேலதிக எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் மீது வெளிநாட்டில் வாழ்கின்ற சீனர்களின் கவனம்

தற்போது சீனா, வளர்ச்சியின் முக்கிய காலத்தில் உள்ளது. அமெரிக்க லாஸ் ஏஞ்சலஸ் சீனரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணருமான சேங்யூஃபூ, தாய்நாட்டின் மாற்றங்களில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். தாய்நாட்டின் வளர்ச்சிக்கு சொந்த முயற்சியை அளிக்க விரும்புகிறார். 19ஆவது தேசிய மாநாட்டின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது அதிக கவனம் வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவிக்கிறார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்