சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளாரான ஷிச்சின்பிங்கிற்கு பன்னாட்டுத் தலைவர்கள் வாழ்த்துக்கள்

மதியழகன் 2017-10-28 16:40:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டிப் பொதுச் செயாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷிச்சின்பிங்கிற்கு, பன்னாட்டுத் தலைவர்களும் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, மனிதக் குலப் பிரச்சினையைத் தீர்க்கும் பயனுள்ள வழிமுறையாகும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன மக்களுடன் இணைந்து முன்னேறிச் செல்லும் பாகிஸ்தான் அரசும் மக்களும் மனித குலத்தின் பொதுவான சமூகத்தை உருவாக்க முயற்சி எடுக்க விரும்புதாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்)கட்சித் தலைவரும் பாகிஸ்தான் அரசுத் தலைவருமான மம்னூன் ஹுசைன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சித் தலைமைச் செயலாளரும் தலைமை அமைச்சருமான லி சியாங் லூங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது

புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் என்ற சிந்தனையின் வழிகாட்டலில், தங்களது மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய கமிட்டியின் தலைமையில் சீனா பன்முகமான துறைகளில் வளர்ந்து வருவதோடு ‘இரண்டு நூற்றாண்டுகள்’குறித்த இலக்குகளையும் நனவாக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்