பிரதிநிதிக் குழுக் விவாதக் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு

மதியழகன் 2017-10-20 11:10:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரதிநிதிக் குழுக் விவாதக் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு தற்போது பெய்ஜிங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்மாநாட்டின் குய்சோ மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தில் 19ஆம் நாள் காலை கலந்து கொண்டபோது, ஷிச்சின்பிங் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த்தோடு அவர்களுடன் விவாதித்தார்.

தென்மேற்கு சீனாவிலுள்ள குய்சோ மாநிலத்தில், வறிய மக்கள் தொகை அதிகம் உள்ளதால், வறுமை ஒழிப்புக்கான பணி மிகக் கடினமாக உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த  பிரிதிநிதிகளில் பலர், வறுமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த விவாதத்தில், 9 பிரதிநிதிகள், பணி நடைமுறைகளின்படி கருத்துக்களைத் தெரிவித்ததோடு தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பிரதிநிதிக் குழுக் விவாதக் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு

2015ஆம் ஆண்டு, குய்சோ மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, துல்லியமான வறுமை நிவாரணத்தின் சிறந்த மாதிரியான ஹுவா மாவ் கிராமத்துக்கு ஷி ச்சின்பிங் சென்றார். இந்த விவாதக் கூட்டத்தில், ஹுவா மாவ் கிராத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் செயலாளர் பான் கேக்காங்,  கிராம சுற்றுலா தொழிலை வளர்ப்பதன் மூலம் கிராமவாசிகள் செல்வம் அடைவதை அறிமுகம் செய்தார்.  இது பற்றி ஷிச்சின்பிங் பேசுகையில், கிராம சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கிராம சுற்றுலாவின் தொடரவல்ல வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பிரிதிநிதிகளின் உரையைக் கேட்டறிந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் குய்சோ மாநிலத்தில் முன்னேற்றங்களை ஷிச்சின்பிங் பாராட்டினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டிதற்கு பிறகு கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிப் போக்கில் காணப்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்களில் ஒன்று, குய்சோ படைத்துள்ள சாதனைகள் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது

சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம், புதிய காலத்தில் நுழைகிறது. சீனாவின் வளர்ச்சியில் புதிய வரலாற்று காலக்கட்டமாக இது திகழ்கிறது. புதிய கால ஓட்டத்திற்கு ஏற்ப, மக்களின் பன்முகமான வளர்ச்சியை முன்னெடுக்கவும் சீன மக்கள் அனைவரும் கூட்டாக செல்வம் அடையவும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனாவின் பணிகளை செவ்வனே செய்ய, கம்யூனிஸ்ட் கட்சி, முக்கிய பொறுப்பேற்கிறது. எனவே, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்குமுறை செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது,  நீண்டகாலம் ஆட்சி செய்வதன் அடிப்படையாக விளங்குகிறது. இது, சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதன் மிக அடிப்படை உத்தரவாதமாகவும் திகழ்கிறது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்