முதலீட்டுக்கு சிறந்த சூழலை உருவாக்கும் சீனா

வான்மதி 2017-10-22 15:17:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலீட்டுக்கு சிறந்த சூழலை உருவாக்கும் சீனா

இவ்வாண்டு சுமார் 6.5 விழுக்காடு என்ற சீனப் பொருளாதார அதிகரிப்பு இலக்கு தடையின்றி நனவாக்கப்படும். அரசு சாரா முதலீடு மற்றும் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் வரும் காலங்களில் மேலும் சிறந்த சூழல் உருவாக்கப்படும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆணையத்தின் தலைவர் ஹே லிஃபேங் பேசுகையில், உலகப் பொருளாதாரம் கடினமாக மீட்சியடைந்து வந்துள்ள பின்னணியில் சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகம் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியைக் கண்டு, உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனையைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

சீனாவின் திறப்பளவுக்கு முக்கிய குறிப்புதவி வணிகச் சூழலாகும். நடப்பு மாநாட்டின் அறிக்கையில், சீனாவின் திறந்த கதவு மூடப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது பற்றி இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் நிங் ஜிச்சே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சீனா அந்நிய முதலீட்டை ஈர்க்கும் அளவு உலகின் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், அடுத்த கட்டமாக, சந்தை நுழைவுக்கான அனுமதியை சீனா பெருமளவில் தளர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்