சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனத்தில் புதிய சிந்தனை

வான்மதி 2017-10-24 17:12:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள சிந்தனை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு 24ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவுற்றது. இம்மாநாட்டில், புதிய மத்திய கமிட்டியும், ஒழுக்கு பரிசோதனைக்கான புதிய மத்திய ஆணையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 18ஆவது மத்திய கமிட்டியின் அறிக்கை தொடர்பான தீர்மானம், ஒழுங்கு பரிசோதனைக்கான 18ஆவது மத்திய ஆணையத்தின் அறிக்கை தொடர்பான தீர்மானம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தின் திருத்தம் தொடர்பான தீர்மானம் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள சிந்தனை

காலை 9 மணிக்கு துவங்கிய நிறைவுக் கூட்டத்தில், 2336 பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் வாக்களித்து, 19ஆவது மத்திய கமிட்டியையும், ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் 133 உறுப்பினர்களையும் தெரிவு செய்தனர்.

18ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் தோழர் ஷிச்சின்பிங் வழங்கிய அறிக்கைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஷிச்சின்பிங் வழங்கிய புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனை, மார்க்சிசம்-லெனின்னிசம், மா சேதுங் சிந்தனை, டெங் சியௌபிங் தத்துவம், மூன்று பிரதிநிதித்துவம் என்ற முக்கிய சிந்தனை, அறிவியல் பூர்வ வளர்ச்சிக் கண்ணோட்டம் ஆகியவற்றுடன் இணைந்து, கட்சியின் செயல் வழிகாட்டலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறைவு கூட்டத்தில் ஷிச்சின்பிங் பேசுகையில், கட்சி உறுப்பினர் அனைவரும் துணிச்சல் மற்றும் முயற்சியுடன், தலைமுறை தலைமுறையான கட்சி உறுப்பினர்களின் தலைமையில் பொது மக்கள் படைத்த சாதனையின் அடிப்படையில் யுகத்துக்கு மதிப்புள்ள பங்களிப்பை அளித்து, நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்