வளரும் நாடுகளுக்கு புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும் இறக்குமதிப் பொருட்காட்சி

மதியழகன் 2018-11-10 14:15:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காயில் நடைபெற்று வருகிறது.

இப்பொருட்காட்சியில், வளர்ந்த நாடுகள், தத்தமது பல்வகை முன்னிலை தொழில் நுட்பங்கள் மற்றும் பொருட்களைக் காட்சிப்படுத்தும் அதேசமயத்தில், வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

வளரும் நாடுகளுக்கு புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும் இறக்குமதிப் பொருட்காட்சி

இந்த நாடுகளின் உணவு, வேளாண் உற்பத்திப் பொருட்ள், ஆடை, அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்கள், செழிப்புமிக்க சுற்றுலா வளங்கள், வரலாறு மற்றும் மனிதப் பண்பாடு உள்ளிட்ட தனிச் சிறப்புமிக்க பொருட்களும் இந்த பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளுக்கு புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும் இறக்குமதிப் பொருட்காட்சி

சீனாவின் நடப்பு இறக்குமதிப் பொருட்காட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மாதிரியாகும். 3,600க்கும் அதிகமான நிறுவனங்கள், 172 நாடுகள், பிராந்தியங்கள், மற்றும் சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன. இவற்றில், ஜி-20 அமைப்பின் உறுப்பினர்கள், பிரிக்ஸ் நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், 35 வளர்ச்சி அடையாத நாடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மிகப் பரந்த அளவில் உலகளாவிய பங்கேற்பை இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த நாடுகளோ வளர்ச்சி அடையாத நாடுகளோ, எதுவாயினும் தங்களது சிறப்புப் பொருட்களோடு, சீனாவில் வணிக மற்றும் சந்தை வாய்ப்புகளைக் கண்டுபிடித்துள்ளன.  சீனாவின் சந்தை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, பொருளாதார உலகமயமாக்கத்தில் பங்கெடுத்து, பொருட்களின் போட்டித் திறனை உயர்த்துவதன் மூலம், வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகள், சீனாவின் இறக்குமதிப் பொருட்காட்சியில் புதிய வாய்ப்பு என்ற ஜன்னலை விரியத் திறந்து வைத்துள்ளன.

இது குறித்து, உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ராபர்டோ அசேவேடோ பேசுகையில்,

நீண்டகாலமாக, சீனா பிற வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து வருகிறது.  சீனா இறக்குமதியை அதிகரிப்பதுடன், அந்த நாடுகள் மேலதிக பயன் பெறும் என்பது உறுதி என்று தெரிவித்தார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்