உலகிற்கு நன்மைகளை கொண்டு வந்துள்ள சீன இறக்குமதிப் பொருட்காட்சி

மதியழகன் 2018-11-11 16:52:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி சனிக்கிழமை அன்று ஷாங்காயில் நிறைவுப் பெற்றது. கடந்த 6 நாட்களில், உலக நாடுகளைச் சேர்ந்த 3,600க்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. இதனிடையில், 5783 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிற்கு நன்மைகளை கொண்டு வந்துள்ள சீன இறக்குமதிப் பொருட்காட்சி

இந்தச் சாதனைகள், உலகின் பொருளாதார வர்த்தக வரலாற்றில் அரியதாகும். பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் இந்தப் பொருட்காட்சியில் மீண்டும் கலந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளன. நடப்பு இறக்குப் பொருட்காட்சி, மூன்று அம்ச நன்மைகளைக் முன்வைத்து, உலகிற்கு நெடுங்காலப் பயன்களை கொண்டு வரும்.

உலகிற்கு நன்மைகளை கொண்டு வந்துள்ள சீன இறக்குமதிப் பொருட்காட்சி

முதலாவதாக,  திறப்பு நிலையை முன்னேற்றி வரும் சீனாவின் இறக்குமதிப் பொருட்காட்சி, உலகின் தடையில்லா வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியை ஊட்டும்.

இரண்டாவதாக, பொதுக் கருத்துகளைக் குவித்து, முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து உலக நாடுகளிடையே ஒத்த நிலைப்பாட்டை உருவாக்குவதாக, இப்பொருட்காட்சி அமையும்.

உலகிற்கு நன்மைகளை கொண்டு வந்துள்ள சீன இறக்குமதிப் பொருட்காட்சி

மூன்றாவதாக, கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம், கூட்டு பகிர்வு என்ற கோட்பாட்டின்படி, பொது எதிர்காலச் சமூகத்தை அமைப்பது என்ற கருத்தின் நடைமுறையாக்கமாகவும், இப்பொருட்காட்சி அமைந்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்