பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 2ஆவது பொற்காலத்துக்கு அழகூட்டும் திறப்பு மற்றும் புத்தாக்கம்

வான்மதி 2019-11-13 11:43:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

11ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நவம்பர் 13, 14 ஆகிய நாட்களில் பிரேசிலின் தலைநகரில் நடைபெறுகிறது. பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 2ஆவது பொற்காலத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, திறப்பு மற்றும் கூட்டு வெற்றியை மையமாகவும் புத்தாக்க வளர்ச்சியை திறவுகோலாகவும் கொண்டு செயல்படுவது, பிரிக்ஸ் நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்புக்கு மிக முக்கியமான அம்சமாகும் என்பது தெளிவு.

தற்போது புதிய தொழில்கள், புதிய முறைகள் முதலியவை தோன்றி வருகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு அவை பெரும் வாய்ப்பை கொண்டு வந்துள்ளன. இதற்கிடையே ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்ததோடு, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியுடன் தொடர்புடைய வெளிப்புறச் சூழலில் உறுதியற்ற காரணிகளையும் அதிகரித்துள்ளன. இத்தகைய நிலைமையில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தை, நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலில் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றியைக் கடைபிடித்து, திறப்புத்தன்மையுடைய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். இதனை அடுத்து, புத்தாக்கத்தின் தலைமையில் நிலைத்து நின்று, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கும் உலகிற்கும் இடையேயான தொடர்பு நெருங்கி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சி குறித்து அவை ஒருமித்த கருத்தைத் தெரிவித்து, கூட்டாக திட்டத்தை முன்வைப்பது என்பது, பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருத்தமாக உள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் சீனா, இதர நாடுகளின் மிக முக்கியமான நெடுநோக்கு மற்றும் வர்த்தகக் கூட்டாளியாகும். ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியம், ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்கா மற்றும் கரீப்பியன் பிரதேசம் ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்களுடன் சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு இணைந்திருப்பது, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றுப் போக்கிற்கு இணங்க வளர்ச்சி வாய்ப்பை இறுகப்பற்றி, அறைகூவல்களை ஒன்றுபட்டுச் சமாளித்தால், 2ஆவது பொற்காலத்தில் புதிய வளர்ச்சியை நனவாக்க முடியும் என நம்பப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்