மக்களுக்கு நன்மை செய்வதே ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனை: ஷிச்சின்பிங்

மதியழகன் 2020-05-23 22:45:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் உள்மங்கோலிய பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டம் நேற்று 22ஆம் நாள் நடைபெற்றது. அப்போது பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேர், மக்களிடம் இருந்து உருவாகும். கட்சியின் தலைமையில், மக்கள் மேற்கொண்டுள்ள ஆக்கப்பணி மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றின் இறுதி நோக்கம், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பதுதான் என்று கூறினார்.

மேலும் ஆட்சி புரியும் போது கட்சி, மக்களுடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, மக்களுடன் இணைந்து நடந்து செல்ல வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வதே, ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனையாக இருக்க வேண்டும். எந்நேரத்திலும் மக்களின் நலன்களை முதலிடத்தில் வைத்து கட்சி செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்