புடொங்:புத்தாக்க வளர்ச்சியின் முக்கிய ஆற்றல்
2020-11-15 23:16:38

புத்தாக்க வளர்ச்சிக்கு ஆற்றலை அதிகரித்து, புதிய சாதனைகளைப் பெறுவது ஷாங்காய் புடொங்கின் புதிய திட்டமாகும். தொழில்நுட்ப வல்லரசை உருவாக்கும் நீண்டகால இலக்கிற்கும், 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட முன்னேற்பாட்டுக்கும் இது பொருங்கியது.

எதிர்காலத்தில், புடொங், சர்வதேச முன்னேறிய தொழில்நுட்ப நிலையை இலக்காகக் கொண்டு. அடிப்படை ஆய்வு மூலம் தற்சார்பான அறிவியல் புத்தாக்கத்தை மேம்படுத்தி, முக்கிய தொழில்நுட்ப துறையில் சீனா முன்னேற்றம் அடைவதற்கு உதவி கரமாக இருக்கும்.

அத்துடன், ஆய்வு மற்றும் வளர்ச்சியிலிருந்து தொழில்மயமாக்கத்துக்குச் செல்லும் ஒருங்கிணைந்த வழியைத் திறந்துவைக்க புடொங் தொடர்ந்து பாடுபட்டு, அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளின் மாற்றத்திற்கு வசதியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் திறமைசாலிகள் மற்றும் நிதி ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த சில ஆண்டுகளில், புடொங், திறமைசாலிகள் தொடர்பான பல கொள்கைகளை வெளியிட்டுள்ளது. புத்தாக்க வளர்ச்சிக்கு இது வலிமையான ஆற்றலை வழங்கியுள்ளது. தற்போது, 14 லட்சத்து 50 ஆயிரம் திறமைசாலிகள் புடொங்கிற்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள்தொகையில் இது நான்கில் ஒரு பகுதியாகும். சீனா விதிமுறை புத்தாக்கம் மூலம், பக்குவமடைந்த சர்வதேச மூலதனச் சந்தையில் இணைந்து, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கச் சந்தையை உருவாக்கியுள்ளது. இதனால், மூலதன சந்தையிலுள்ள நிதி புழக்கம் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்துக்கு அதிக ஆற்றலை வழங்கும்.

கடந்த 30 ஆண்டுகளைப் போல் எதிர்காலத்திலும் புடொங் திறந்த சூழ்நிலையில் வளர்ச்சி அடையும். உள்நாட்டு பெரிய சுழற்சி, உள்நாட்டு மற்றும் சர்வதேச இரட்டை சுழற்சி ஆகியவற்றின் மூலம் புடொங்கை முக்கிய பகுதியாக மாற்றி, உலக அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கங்களைத் திரட்டி, சீனாவின் உயர் தர வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.