ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முக்கிய முன்மொழிவு
2020-11-15 16:42:08

உலகப் பொருளாதாரத்தில் 20 விழுக்காட்டையும் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டையும் கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, “ஷாங்காய் எழுச்சியை” வழிகாட்டலாகக் கொண்டு, உலகின் முக்கிய ஆக்கப்பூர்வமான ஆற்றலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவ்வாண்டின் அதன் உச்சி மாநாட்டில், சீன உச்ச தலைவர் ஷிச்சின்பிங் “சுகநலப் பொதுச் சமூகம்”, “பாதுகாப்புப் பொதுச் சமூகம்”, “வளர்ச்சிப் பொதுச் சமூகம்”, “மானிடவியல் பொதுச் சமூகம்” ஆகிய முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்தார். இவை, தற்போதைய உலக நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சீனா வழங்கியுள்ள திட்டங்களாகும். இவை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் கூட்டாக அறைகூவல்களைச் சமாளிக்கும் உத்திநோக்கை நிர்ணயிக்கத் துணை புரியும். அதோடு பாரம்பரியமற்ற பாதுகாப்பு பிரச்சினையைச் சமாளிப்பதிலிருந்து, பாதுகாப்பு, பொருளாதார வர்த்தகம், மானிடவியல் முதலிய ஒத்துழைப்பு மேற்கொள்வது வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டு வளர்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் மென்மேலும் வலிமையான உயிராற்றலைக் காட்டுகிறது.