வேகமான வளர்ச்சியில் சீனப் பொருளாதாரம்
2020-11-17 21:30:23

இவ்வாண்டின் அக்டோபர் திங்கள், சீனாவின் தொழில்துறை உயர் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. நுகர்வு மற்றும் முதலீடு தொடர்ந்து மீட்சியடைந்து ஏற்றம் கண்டன. சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடைந்து வருகின்றது. இவ்வாண்டில் உலகின் முக்கியப் பெரிய பொருளாதார சமூகங்களில் அதிகரிப்பை நனவாக்கிய ஒரே நாடு சீனாவாக உள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியில், புதிய தொழில் துறைகள் சிறந்த அதிகரிப்பு போக்கை நிலைநிறுத்தின. புதிய பொருட்கள் வேகமான அதிகரிப்பைப் பெற்றுள்ளன. இது, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய மேம்பாட்டை உருவாக்கி, புதிய இயக்காற்றலை ஊட்டி, உலகளவில் உள்ளார்ந்த ஆற்றல் மிக்க பெரிய சந்தையின் ஈர்ப்பு ஆற்றலையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

சீனப் பொருளாதாரம், வலுவான நெகிழ்தன்மை. நல்ல மீட்சித் திறன் மற்றும் மிகப்பெரிய வளர்ச்சி திறனைக் கொண்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பல தலைசிறந்த கொள்கைகளின் செயல்பாட்டுடன், சீனப் பொருளாதார மீட்சிக்கான சாதகமான காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகப் பொருளாதார மீட்சிக்கு இது நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

இவ்வாண்டின் அக்டோபர் திங்கள், சீனப் பொருளாதார மீட்சி திட்டமிடப்பட்டதை விட அதிகரித்தது. தொற்று நோய் பாதிப்பிலிருந்து சீனா மீண்டுள்ளதாக வெளிநாடுகளின் முக்கியச் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.