2020ஆம் ஆண்டு சீன 5ஜி பிளஸ் தொழிற்துறை இணையக் கூட்டத்திற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2020-11-20 14:55:07

2020ஆம் ஆண்டு சீன 5ஜி பிளஸ் தொழிற்துறை இணையக் கூட்டம், நவம்பர் திங்கள் 20ஆம் நாள் ஹூபெய் மாநிலத் தலைநகர் வூகானில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், 5ஜி மற்றும் தொழிற்துறை இணையத்தின் ஒன்றிணைப்பு, புதிய ரக தொழிற்துறை மயமாக்க முன்னேற்றப் போக்கை மேலும் முன்னேற்றி, சீனப் பொருளாதரா வளர்ச்சிக்கும் புதிய தூண்டுதல் ஆற்றலைக் கொண்டு வருவதோடு கரோனா வைரஸ் பாதிப்பின் பின்னணியில் உலகப் பொருளாதாரத்திற்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஹூபெய் மாநிலத் தலைநகர் வூகானில் இக்கூட்டம் தொடங்குவது சிறப்பு அர்த்தம் வாய்ந்தது என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.