சீனாவின் புதிய வளர்ச்சி அமைப்பு முறை, உலக நாடுகளுக்கு நன்மை பயப்பது
2020-11-20 09:48:06

கதவு-அடைப்பு மற்றும் தனித்துவத்தைக் கடைப்பிடிக்கும் குழுக்களை உருவாக்குவதில் சீனா எப்போதும் ஈடுபடாது என்று 19ஆம் நாள் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். சந்தை, திறப்பு, ஒத்துழைப்பு முதலியவற்றிலிருந்து சீனாவின் புதிய வளர்ச்சி அமைப்பு முறை, உலக நாடுகளுக்கு நன்மை பயப்பது குறித்து அவர் விளக்கிக்கூறினார்.

ஷிச்சின்பிங் விரிவான தரவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, உள் நாட்டுத் தேவையை விரிவுபடுத்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை முன்னேற்றுவது, சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஆழமாக்குவது ஆகியவற்றை எடுத்துக்கூறினார். இதன் மூலம், உலக நாடுகள் சீனா பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.

சுங்க வரியை மேலும் குறைப்பது, மேலதிக நாடுகளுடன் தாராள  வர்த்தக மண்டலக் கட்டுக்கோப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தரக் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றுவது ஆகியவற்றின் மூலம் புதிய வளர்ச்சி அமைப்புமுறையில் உலகத்துக்கு மேலதிக சந்தைத் தேவையையும் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் கூட்டு வெற்றியையும் சீனா எவ்வாறு உருவாக்கிறது என்பது தொடர்பான திட்டமும் திட்டவட்டமான நடவடிக்கைகளைச் சீனா வெளியிட்டுள்ளது.

சீன சந்தை இல்லாவிட்டால், மூன்றாம் காலாண்டில் எங்கள் வணிகம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று ஜெர்மனி வாகன சென்சார் வினியொகத் தொழில் நிறுவனமான USTயின் தலைமைச் செயல் அதிகாரி ஓலாஃப் கீஸ்வெட்டர் கூறினார்.