5 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கொவைட்-19 விதிகள் தளர்வு – பிரிட்டன்
2020-11-20 10:09:42

பிரிட்டனுக்குச் செல்லும் இஸ்ரேல், உருகுவே, நமீபியா, ருவாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று அந்நாட்டு போக்குவரத்துச் செயலர் கிரான்ட் ஷேப்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கொவைட்-19 கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு செய்யப்பட்டாலும், டிசம்பர் 2ஆம் நாள் வரை நீடிக்கும் பொதுமுடக்க விதிமுறைகளைப் பயணிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதம், ஒரு மாதம் நீடிக்கும், தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வரை பிரிட்டனில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 775ஆக உயர்ந்துள்ளது.