ஜி-20 மேலும் பெரிய தலைமைப் பங்கு ஆற்றுவதற்கு சீனாவின் முன்மொழிவு
2020-11-22 19:02:13

ஜி-20 மேலும் பெரிய தலைமைப் பங்கு ஆற்றுவதற்கு சீனாவின் முன்மொழிவு

பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுதல், திறப்புடன் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கடைப்பிடித்தல்,  ஒத்துழைப்புடன் பரஸ்பர நலன்களைப் பெறுவதைக் கடைப்பிடித்தல், காலஓட்டத்துடன் முன்னேறி செல்வதில் ஊன்றி நிற்றல் ஆகிய குறிக்கோளுடன், 20 நாடுகள் குழு (ஜி-20)  மேலும் பெரிய தலைமைப் பங்கு ஆற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் ஜி-20 உச்சி மாநாட்டின் கூட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

இந்த முன்மொழிவு, சீனாவின் நடைமுறை அனுபவங்களின் தொகுப்பாகவும், ஜி-20 அமைப்பின் ஆரம்பக் குறிக்கோள் மற்றும் வளர்ச்சி இலக்குக்குப் பொருத்தமாகவும் உள்ளது. சர்வதேச சமூகத்தில் பரந்த அளவில் கருத்து ஒற்றுமையையும் இது வெளிக்காட்டுகிறது. இதனால், சீனாவின் இந்த மொழிவு, முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு, உலகவில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஜி-20 அமைப்பின் தலைவர்கள் சந்திப்பு என்ற முறைமை தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளில், இந்த இயக்க முறைமை, உலக ஆட்சியின் முக்கிய மேடையாக மாறியுள்ளது.

2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியை விட, மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொவைட்-19 தொற்று நோய் சமாளிப்பில் ஜி-20 அமைப்பின் பங்கு முக்கியமாக உள்ளது. மேலும் தொலைநோக்குப்  பார்வையில், சந்தை நம்பிக்கையை மேம்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டு வரவும் ஜி-20 செயல்பட வேண்டும்.

இந்தச் சிக்கலில் இருந்து எப்படி விடுபடுவது என்ற கேள்விக்குப் பதிலாக, தொற்று நோய்க்கு எதிரான உலக பாதுகாப்பு வேலியை அமைத்தல், உலகப் பொருளாதாரத்தைச் சுமுகமாக இயங்கச் செய்தல், எண்முறைப் பொருளாதாரத்தின் பங்களிப்பை அதிகரித்தல், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நனாவாக்குதல் ஆகிய நான்கு ஆலோசனைகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அளித்தார். ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின், வளரும் நாடுகளை ஆதரிக்கும் விதம்,  ஜி-20 மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு, உலக நிதி நெருக்கடியை எதிர்கொண்டபோது, சீனா முனைப்புடன் ஜி-20 முறைமையை ஆதரித்து, உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய ஆற்றலாக  இருந்தது. இந்த தொற்று நோயினால் உண்டாகியுள்ள பல அறைகூவல்களை எதிர்கொண்டபோது, முன்பு போலவே சீனா பங்காற்றி வருகிறது. தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உலக ஆட்சிமுறையை இடைவிடாமல் முழுமைப்படுத்துவதில் கூட்டாக பாடுபடும்.