வறுமையைத் தீர்ப்பதற்கான திறவுகோல் வளர்ச்சி தான்- ஷிச்சின்பிங்
2020-11-22 23:30:54

வறுமைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக வளர்ச்சி அமையும். வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நேரலை, உலகின் ஒட்டுமொத்த கொள்கை ஒருங்கிணைப்பில் மேலும் முனைப்பான இடத்தில் வைக்க வேண்டும். வறுமைக் குறைப்பில் எண்முறை தொழில் நுட்பத்தின் பங்கினை ஆற்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெண்கள், மற்றும் இளைஞர்களுக்கு மேலதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

22ஆம் நாளிரவு காணொளி வழியாக நடைபெற்ற ஜி-20 அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டின் 2ஆவது கட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில்,

சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை நடைமுறையில் இருந்த 40 ஆண்டுகளில், சீனாவில் 70 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். உலகின் வறுமைக் குறைப்புப் பணியில் சீனா 70 விழுக்காட்டு பங்களிப்பை அளித்துள்ளது.

பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வறுமை இல்லாத  மற்றும் கூட்டு வளர்ச்சி பெறும் அருமையான உலகை உருவாக்க ஒற்றுமையுடன் செயல்படுகின்றோம் என்று தெரிவித்தார்.