உயரத்தில் நின்று உலகை பாருங்கள்
2020-11-23 21:28:58

கடந்த ஒரே வாரத்தில், தூதாண்மைத் துறையில் மூன்று முக்கிய பலதரப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 23முக்கிய முன்மொழிவுகள் மற்றும் நடவடிக்கைகள் அளிக்கப்பட்டன. இதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனா தரப்பிலான தீர்வுகளை மீண்டும் வழங்கினார். தற்போதைய நெருக்கடியிலிருந்து உலகை விடுவிக்க வழங்கப்பட்ட யோசனை ஆகும்.

தற்போது, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது, மிக அவசரக் கடமையாகும். மூன்று உச்சி மாநாடுகளில், தொற்று நோய்க்கு எதிரான சீனாவின் அனுபவங்களை இணைத்து, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் பற்றி ஷிச்சின்பிங் விரிவாக விளக்கி கூறினார். பொது மக்களின் நலனை மையாக கொண்ட வளர்ச்சிக் கருத்தை பல்வேறு தரப்புகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஒற்றுமையும் ஒத்துழைப்பும், தொற்று நோயை தோற்கடிக்கும் வலுமை மிகுந்த ஆயுதமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். தவிர, தடுப்பூசியை உலக மக்களால் வாங்கக்கூடிய விலைவில் பொதுப் பொருட்களாக்கி விநியோகிக் முயற்சி செய்வோம் என்று ஷிச்சின்பிங் மீண்டும் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பினால், உலகப் பொருளாதார ஆட்சிமுறை முக்கிய திருப்புமுனை காலத்தில் உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, புதிய வளர்ச்சி அமைப்புமுறையின் உருவாக்கத்தை விரைவுப்படுத்தி வருகின்றது. சர்வதேச சமூகத்தின் அதிக கவனத்தை இது ஈர்த்துள்ளது. மேலும், இது, சீனாவிலும் உலகிலும் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த உச்சி மாநாடுகளில், சீனச் சந்தை கதவு  மூடப்படாது என்று ஷிச்சின்பிங் தெளிவாக கூறினார். சிலி நாட்டின் டியாகோ போர்டேல்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் கான்ஸ்டன்டா ஹோர்க்ரா பேசுகையில், சீனா ஆக்கப்பூர்வமாக புதிய வளர்ச்சி அமைப்புமுறையை உருவாக்கி, வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நிற்பது, தாராள வர்த்தகத்தையும் பலதரப்புவாதத்தையும் முன்னேற்றுவதில் சீனாவின் மனவுறுதியை காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

அமைதி மற்றும் வளர்ச்சி என்ற நிலை மாறாது. உலக பலதுருவமயமாக்கம் மற்றும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் என்ற கால ஓட்டமும் திரும்பாது. நாம் ஒரே கப்பலில் இருக்கிறோம் என்று பல்வேறு நாடுகள் மேலும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.