வறுமையைத் தீர்ப்பதற்கு திறவுகோல் - வளர்ச்சி
2020-11-24 18:28:23

வறுமையைத் தீர்ப்பதற்கு திறவுகோல் - வளர்ச்சி

கொவைட்-19 பெரும் தொற்று காரணமாக, உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பியில் இருக்கிறது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி 2020ஆம் ஆண்டு உலகளவில் தீவிர வறுமையில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 20ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக உயர்ந்துள்ளது. தொற்று நோயினால் உலகளவில் 15 கோடி மக்கள் மீண்டும் வறுமையில் சிக்கியுள்ளனர். தொற்று நோய் சமாளிப்பு, பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கை ஆகிய கடமைகளை எப்படி ஒருங்கிணைப்பது,  உலகின் வறுமை ஒழிப்பு இலக்கை எப்படி நனவாக்குவது ஆகியவை, பன்னாட்டுச் சமூகத்தில் அவசரமாகத்  தீர்க்க வேண்டிய சிக்கல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக ஜி-20 ரியாத் உச்சி மாநாட்டின் கூட்டத் தொடரில், நிலையான வளர்ச்சி குறித்து பேசுகையில், வறுமையைத் தீர்ப்பதற்கான திறவுகோல்தான் வளர்ச்சிக்கான  ஒரே வழி என்று அறிவுறுத்தினார்.

மேலும் பெரிய சிக்கல் மற்றும் அறைகூவல்களை எதிர்கொள்ளும்போது, வளர்ச்சித் திசைக்கு எப்படி பொறுப்பேற்று நடத்துவ என்பது மேலும் முக்கியமானதாகும். வளரும் நாடுகளைப் பொறுத்த வரை, ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைத் தலைமையாக கொண்டு, வளர்ச்சி நம்பிக்கையில் ஊன்றி நின்று, மக்களின் வாழ்க்கையில் கவனத்தைக் குவிக்கும் நோக்கில் செயல்பட்டால், வறுமையைத் தோற்கடிக்கும் திசையை நோக்கி செல்லும் என்று நம்புகின்றோம்.

சரியான எண்ணத்துடன், நடைமுறைக்கு ஏற்ற செயல் அவசியமானது. உலகின் வறுமை ஒழிப்புக்காக, சீனா பல விரிவான ஆலோசனைகளை முன்மொழிந்துள்ளது. அவற்றில், வளரும் நாடுகளுக்கு நிதி திரட்டலுக்கான இன்றியமையாத ஆதரவு அளித்தல்,  உள்கட்டமைப்பு மற்றும் ஒன்றுடன் ஒன்றிணைப்பு வசதிகளின் கட்டுமானத்தை முன்னெடுத்தல், வர்த்தக தடைகளைக் குறைத்தல், வறுமை ஒழிப்பில் எண்முறைப் பொருளாதாரத்தின் பங்களிப்பை ஆற்றுதல் உள்ளிட்டவை உண்டு.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உண்மையான வளர்ச்சி தான். கடந்த 23ஆம் நாள், சீனாவில் வறுமைப் பகுதிகள் அனைத்தும், வறுமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தீவிர வறுமை ஒழிப்பு என்ற இலக்கை, சீனா 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நனவாக்கியுள்ளது. எதிர்காலத்தில், வளரும் நாடுகள் தற்சார்பாக வறுமையைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துவதற்கு உதவி வழங்க சீனா தனது பங்களிப்பை அளிக்கும். இதன் மூலம், உலக நாடுகளுடன் இணைந்து வறுமை இல்லாத மற்றும் பொது வளர்ச்சி காணப்படும் அருமையான உலகை ஒற்றுமையுடன் கட்டியமைப்போம்.