சீன அரசுத் தலைவர் மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சர் தொலைபேசி உரையாடல்
2020-11-24 21:06:37

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 24-ஆம் நாள் ஜெர்மனி தலைமையமைச்சர் மெர்க்கெல் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

சர்வதேச நிலைமையில் கிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு உலகளாவிய மற்றும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தரப்பும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்து, பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் ஆலோசனை தெரிவித்தார்.

மெர்க்கெல் கூறுகையில், கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான கட்டுபாட்டுப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரம் முதலில் மீட்சி அடைந்துள்ளது. ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு இது நல்லச் செய்தி என்று தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் தடுப்பூசி ஒத்துழைப்பு பற்றிய தொடர்பை வலுப்படுத்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய எரியாற்றல் வாகனங்கள் முதலிய துறைகளிலான ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஜெர்மனி மற்றும் சீன உறவும், ஜரோப்பிய மற்றும் சீன உறவும் சீராக வளர்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்வேன் என்றும் மெர்க்கெல் கூறினார்.