அதிகார மாற்றத்துக்கு அமெரிக்கா தயார்
2020-11-24 11:45:46

ஜோ பைடன் புதிய அரசுத் தலைவராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தயார் என்று அமெரிக்க பொது சேவை நிர்வாகத் தலைவர் ஏமிரி மோஃபி 23ஆம் நாள் ஜோ பைடன் மற்றும் அவரது குழுவுக்குத் தெரிவித்தார். அன்று மாலை அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் சுட்டுரையில் இத்தகவலை உறுதி செய்தார். எனினும் டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.