சாங்ஏ-5யின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
2020-11-24 17:23:43

24ஆம் நாள் அதிகாலை 4:30 மணிக்கு, சாங்ஏ-5 எனும் சந்திர ஆய்வு விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இப்பயணம் 4 துறைகளில் சிறந்த சாதனைகளைப் பெறும். ஒன்றாவதாக, சந்திரத்தில் தானியங்கி மண் மாதிரிகளை முதல்முறையாகப் பெறும். இரண்டாவதாக, முதல்முறையாக சந்திரனிலிருந்து புறப்பட்டு பறக்கும். மூன்றாவதாக, 3.8 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சந்திரனைச் சுற்றிய பாதையில் முதல்முறையாக ஆள்ளில்லாத நிலையில் இணைக்கும் பணியை நனவாக்கும். நான்காவதாக, முதல்முறையாக சந்திர மண்ணைக் கொண்டு, பூமிக்குத் திரும்பும் என்று சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் தலைமை அறிவியலாளர் ஆவ்யாங்சியுவான் அறிமுகப்படுத்தினார்.

சாங்ஏ-5 விண்கலம் இந்த முறை சுமார் 2 கிலோகிரம் சந்திர மண்ணைக் கொண்டு திரும்புவதன் மூலம், சந்திரனில் மனிதகுலத்தின் அறிவை மேலும் ஆழமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.