ஆய்வு விண்கலன் சந்திரனில் இருந்து புவிக்கு திரும்புவது எப்படி?
2020-11-24 21:25:26

நிலா ஆய்வுக்காக  இதற்கு முன்பு அனுப்பப்பட்ட விண்கலன்களோடு ஒடுப்பிடும் போது, சாங் ஏ- 5 எனும் விண்கலன், நிலாவிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும். இத்தகைய கடமை நிறைவேற்றும்  விண்கலனை சீனா முதல்முறையாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மண் மாதிரிகளை எடுத்து பூமிக்கு திரும்பும் விதம், சாங் ஏ- 5 விண்கலத்தில்  2 இயந்திரங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது.  ஏறும் இயந்திரம், மற்றும் திரும்பும் இயந்திரம்  என இந்த இரண்டும் அழைக்கப்படுகிறது. ஏறும் இயந்திரத்தின் மூலம், மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நிலாவைச் சுற்றிப் பறந்து திரும்பும் இயந்திரத்திற்கு  கொண்டு செல்லப்படும். ஏறும் இயந்திரமும், திரும்பும் இயந்திரமும் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, புவிக்கு திரும்பும். மேலும், 3.8 லட்சம் கிலோமீட்டர் தொலைதூரத்தில் ஆளில்லா முறையில் இயந்திரங்களை ஒன்றாக இணைக்கும் பணியை சீனா நிறைவேற்றும். விண்வெளி வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.