சீனாவின் நடவடிக்கை கோவிட்-19 பாதிப்பைக் குறைத்தது: புதிய ஆய்வின் முடிவு
2020-11-25 11:59:49

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் சீனா துரித தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இவ்வைரஸின் பாதிப்பு பயனுள்ள முறையில் துறைக்கப்பட்டது என்று புத்தாக்கம் எனும் இதழ் இணையவழி வெளியிட்ட ஆய்வின் முடிவு காட்டியுள்ளது.  புத்தாக்கம் இதழ், அமெரிக்காவின் செல் வெளியீட்டகம், சீன அறிவியல் கழகத்தின் இளைஞர் புத்தாக்க முன்னேற்றச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.

வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா விரைவாக மேற்கொண்ட பிறகு சீனாவில் கரியமில வாயு வெளியேற்ற அளவு இவ்வாண்டின் பிப்ரவரியில் பெரிதும் குறைந்தது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கரியமில வாயு வெளியேற்ற அளவுக்கும் சமூக மற்றும் உற்பத்தி செயல்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை, கரோனா பாதிப்பிலான மாற்றத்துடன் இணைத்து கணக்கிட்டு, சீனா மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயன்கள் பற்றி ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர்.

மதிப்பீட்டின்படி, வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை தாமதமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், வேறுபட்ட இடங்களில் வைரஸ் பாதிப்பு பெருமளவு அதிகரித்திருக்கும். எனவே, துரித நடவடிக்கைகளால், கடந்த பிப்ரவரி இறுதி வரை லட்சக்கணக்கானோர் இவ்வைரஸால் பாதிக்கப்படுவதை சீன அரசு தவிர்த்துள்ளது.

சீனாவின் நடவடிக்கை பொருளாதார இழப்பை ஏற்படுத்திய போதிலும், புதிய ரக கரோனா வைரஸ் பெருமளவில் பரவுவதைத் தடுத்து, சமூகப் பொதுச் சுகாதாரத் துறையில் பெரும் நலன்களைப் பெற்றுள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.