ஆப்கானிஸ்தானுக்கான உதவி பற்றிய சர்வதேச மாநாடு
2020-11-25 12:32:51

ஆப்கானிஸ்தானுக்கான உதவி பற்றிய சர்வதசே மாநாடு 24ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி, 66 நாடுகள் மற்றும் 30க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகள் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, 2021-2024 ஆம் ஆண்டு கூட்டு வளர்ச்சி நோக்கத்தை நனவாக்கப்பாடுபடும். அதோடு, பெண்கள், இளைஞர்கள், இன, மத மற்றும் பிற சிறுபான்மையினர்களின் பங்களிப்புடன் ஆப்கானிஸ்தானின் அமைதிப் போக்கை முன்னேற்ற வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டில் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு 330 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும். 2024ஆம் ஆண்டுக்கு முன், ஆப்கானிஸ்தானின் அமைதிப் போக்கிற்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் சர்வதேச சமூகம் வழங்கும் ஆதரவு இம்மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்தி அமைதி, நிதானப்பாடு மற்றும் வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.