பெரும் மாற்றம் கண்ட உலகில் சீனாவின் பொறுப்புணர்வு
2020-11-25 19:16:28

பெரும் மாற்றம் பெரிய அறைகூவலை ஏற்படுத்தும். பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய போதிலும், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கால ஓட்டம் மாறவில்லை. உலக பலதுருவமயமாக்கம், பொருளாதார உலகமயமாக்கம் ஆகிய முன்னேற்றப் போக்கு தலைகீழாக மாறாது. பலதரப்புவாதம், தாராளர வர்த்தகம் ஆகியவை சர்வதேச சமூகத்தின் பொது நலனுக்குப் பொருந்தியது. இத்துறையில், சீனாவின் உறுதி மற்றும் பொறுப்புணர்வு வெளிநாட்டு அரசியல்வாதிகள் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தற்போது, திறப்பின் மூலம் சீர்திருத்தத்தையும், ஒத்துழைப்பின் மூலம் வளர்ச்சியையும் முன்னெடுக்கும் முன்னேற்றப் போக்கு சீனா வேகத்தை நிறுத்தவில்லை.

அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏபெக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், பசிபிக் கடந்த கூட்டாளியுறவுக்கான பன்முக மற்றும் முன்னேற்ற உடன்படிக்கையில் கலந்து கொள்வதை சீனா ஆக்கப்பூர்வமாக கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்தார். பொருளாதாரத்தின் உலகமயமாக்கம், பிராந்திய பொருளாதார ஒருமைப்பாடு ஆகியவற்றை முன்னேற்ற துணை புரியும் தாராள வர்த்தக உடன்படிக்கைகளில் சீனா திறந்த நிலைப்பாட்டுடன் கலந்து கொள்ள விரும்புவதை இது காட்டுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில், சீனா இறக்குமதி செய்யும் தொகை 22 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும். 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவின் சந்தை, உலகச் சந்தையாக மாறும்.

மேலும் கடினமான அறைகூவல்களைச் சமாளிக்கும் போது, திறப்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். இது வளர்ச்சி விதியும், வரலாற்று அனுபவமும் ஆகும். திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, பலதரப்புவாதம் மற்றும் செழுமையான முன்னேற்றம் என்ற கூட்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்ல வழிகாட்டுகிறது.