சீன நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாட்டு நடவடிக்கைகளை இந்தியா சரிச்செய்ய வேண்டும் – சீனா
2020-11-25 20:42:06

சீன நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாட்டு நடவடிக்கைகளை இந்தியா சரிச்செய்ய வேண்டும். சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய 43 கைப்பேசிச் செயலிகளைுக்கு கூடுதலாக தடை விதிப்பதாக இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜியான் 25ஆம் நாள் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு ஜுன் திங்கள் முதல்,  தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கைப்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதிப்பதில் 4முறையாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து ஜாவ் லீஜியான் மேலும் கூறுகையில்

இந்தச் செயல், சந்தைக் கோட்பாட்டையும் உலக வர்த்தக விதிமுறையையும் தெளிவாக மீறியுள்ளது. ஒன்றுக்கொன்று நன்மை அளிப்பது, சீன-இந்திய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் மையமாகத் திகழ்கிறது. இந்திய அரசு, பொறுப்பேற்று, சந்தைக் கோட்பாட்டுக்கு இணங்க சீன நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.