விண்வெளி ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கு சீனா வரவேற்பு
2020-11-25 12:06:42

சாங்ஏ-5 சந்திர ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை ஒட்டி, முதலாவது வென்சாங் சர்வதேச விமான மற்றும் விண்வெளி கருத்தரங்கு 24ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் ஹாய்கோவ் நகரில் நடைபெற்றது. சீனத் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் தலைமைச் செயலாளர் ஷு ஹொங்லியங் இதில் கூறுகையில், தற்போது சர்வதேச சந்திர ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் குறுங்கோள் ஆய்வு, செவ்வாய் கிரகத்திலிருந்து பொருள் மாதிரிகளைச் சேகரித்து திரும்புவது, வியாழன்கிரக முறைமை மற்றும் கிரகங்களிடையே பயணித்தல் மற்றும் ஆய்வு உள்ளிட்ட கடமைகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் சீனாவின் எதிர்கால சந்திர மற்றும் ஆழ விண்வெளி ஆய்வுகளில் கலந்து கொள்ள வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

தற்போது சீனத் தேசிய விண்வெளி நிர்வாகம் 44 வெளிநாட்டு விண்வெளி நிறுவனங்களுடனும் 4 சர்வதேச அமைப்புகளுடனும் 140க்கும் மேற்பட்ட விண்வெளி ஒத்துழைப்பு ஆவணங்களை உருவாக்கி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுக் கடமைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.