சீன-ஜப்பானின் பொது கருத்துக்கள் மற்றும் திட்டங்கள்
2020-11-25 16:36:42

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 24ஆம் நாள், ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது, சீன-ஜப்பானிய உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச பிரச்சினைகள் முதலியவை குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொதெஜி டோஷ்மித்சு உடன், வெளிப்படையாகவும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

பின்னர், வாங்யீ டோக்கியோவில், மொதெஜி டோஷ்மித்சு உடன் சேர்ந்து, செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, 5 முக்கிய பொது கருத்துகள் மற்றும் 6 விரிவான திட்டங்கள் இதில் எட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.

உலகளவில் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. பல்வேறு நாடுகள் ஒன்றுபட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, அறைகூவலைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.