படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டி
2020-12-04 14:48:29

படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டி

நண்பர்களே!படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ள வாங்க!!

கீழே இப்போட்டிக்கான விதிமுறைகளைப் பாருங்கள்.

சீன-இந்தியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டியைச் சீன ஊடகக் குழும தமிழ் பிரிவு நடத்துகிறது. நடப்புத் தலைப்பு:“சீனாவின் மீதான மனப்பதிவு”.

நேரம்

2020ஆம் ஆண்டு டிசம்பர் 5 முதல் 25ஆம் நாள் வரை புகைப்படங்களை அனுப்பலாம்.

2021ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பரிசு பெறும் சிறந்த புகைப்படங்கள் வெளியிடப்படும்.

புகைப்படங்களுக்கான விதிமுறைகள்

  1. சீனாவின் மீதான உங்கள் மனப்பதிவை நிழற்படங்களின் மூலம் வெளிப்படுத்துங்க. எடுத்துக்காட்டாக, வாழ்க்கையிலுள்ள சீனா பற்றிய அம்சங்கள், சீனாவில் பயணம் பற்றிய நிழற்படங்கள், சீன நண்பர்களுடனான நிழற்படங்கள் முதலியவற்றை அனுப்பலாம்.
  2. புகைப்படங்களை எடுக்கும் கருவிகளுக்கான கட்டுபாட்டு இல்லை. வரலாற்று புகைப்படங்களை மின்னணு ஸ்கேனிங் பதிப்பில் அனுப்பலாம்
  3. நீங்கள் சொந்தமாகவே எடுக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்
  4. ஒவ்வொருவர் அனுப்பும் புகைப்படங்களின் எண்ணிக்கை 3-ஐ தாண்டக்கூடாது.
  5. சீனா மற்றும் இந்தியாவின் சட்டங்களை இப்புகைப்படங்கள் பின்பற்ற வேண்டும். மேலும், பிற மக்களின் சட்டப்பூர்வ உரிமைக்கும் நலனுக்கும் ஊறுவினைவிக்க கூடாது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் வழிமுறை

குறிப்பிட்ட காலத்துக்குள் உங்கள் புகைப்படங்கள், உங்கள் பெயர், புகைப்படங்களின் தகவல்கள் உள்ளிட்டவற்றை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த 2 மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பலாம். புகைப்பட எடுப்பவரின் பெயரும், புகைப்படத்தின் பெயரும் அனுப்பப்பட வேண்டும்.

inch@cri.com.cn

inchtamil@gmail.com

பரிசுகள்

முதல் பரிசு:ஒரு நபருக்கு

இராண்டாவது பரிசு:3 பேருக்கு

மூன்றாவது பரிசு:5 பேருக்கு

நினைவு பரிசு:பலருக்கு

தொடர்புடைய நிபுணர்கள் சிறந்த நிழற்படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பரிசு பெறும் புகைப்படங்கள் CRI Tamil முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும். அத்துடன் மின்னஞ்சல் மூலம் பரிசு பெற்றவர்களுடன் தொடர்பு கொள்வோம். பரிசு பெற்றவர்களுக்கு தமிழ் பிரிவின் நேரலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புள்ளது.

பிற விஷயங்கள்

இப்போட்டியுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளில், இப்போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள், பங்கேற்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களின் தகவல்களைப் பயன்படுத்தும் உரிமை, சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் பிரிவுக்கு உண்டு.

சீன ஊடகக் குழுமத்தின் முடிவு இறுதி முடிவாகும்.

மேலும்