2019ஆம் ஆண்டின் இறுதியில் பிரேசிலின் புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு: ஆய்வு முடிவு
2021-01-13 17:29:26

உலகில் புதிய ரக கரோனா வைரசின் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதிப்படுத்தப்பட்டதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் நடுபகுதியிலேயே, தென்கிழக்குப் பிரேசிலின் எஸ்பிரிட்டோ சேன்டோ மாநிலத்தில் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார் என்று அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை ஜனவரி 12-ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் தொடங்கி 2020ஆம் ஆண்டின் ஜுன் 30ஆம் நாள் வரையிலான காலத்தில், டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்வி (CHIKV) தொற்றுநோய் ஆகியவை பற்றி ஆய்வுக்காக 7300 இரத்த மாதிரிகளை சோதனை செய்த போது, 210மாதிரிகளில் புதிய ரக கரோனா வைரஸின் எதிரணுக்கள் கண்டறியப்பட்டது. 2019ஆம் ஆண்டில் டிசம்பர் 18-ஆம் நாளில் சிக்வி CHIKVதொற்று நோயாளி ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரியில் புதிய ரக கரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரேசிலில் 2020ஆம் ஆண்டு பிப்ரல் 26-ஆம் நாள் அன்றே புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதிப்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டின் மார்ச் திங்களில் இத்தொற்று நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.