© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் 2020ஆம் ஆண்டுக்கான செய்தியாளர் கூட்டத்தில் காணொளி மூலம் கலந்து கொண்டு, ரஷியாவின் தூதாண்மைப் பணி, பிரதேச மற்றும் சர்வதேச அளவிலான சூடான பிரச்சினைகள் பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் நெடுநோக்கு வாய்ந்த பரஸ்பர நம்பிக்கையைக் கொண்டுள்ளன. கரோனா பாதிப்பின் தொடக்கம் முதலே, இரு நாடுகளிடையில் நெருக்கமான ஒத்துழைப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். உலகின் கரோனா தடுப்புப் பணி பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், கரோனா தொற்று நோயைப் பயன்படுத்தி அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகளுடன் பிற நாடுகளுக்கு நிர்ப்பந்தம் அளித்து பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.