அமெரிக்க-சீன ஒத்துழைப்பு பற்றி அமெரிக்க-சீன வர்த்தக ஆணையத் தலைவரின் விருப்பம்
2021-01-19 18:46:39

காலநிலை மாற்றம், புதிய ரக கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட உலகளவிலான அறைகூவல்களைச் சமாளிப்பதில் அமெரிக்காவும் சீனாவும் ஒத்துழைப்பு மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவில் உள்ள அமெரிக்க-சீன வர்த்தக ஆணையத்தின் தலைவர் க்ரைக் அலேன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சின்குவா செய்தி நிறுவனத்துக்கு காணொலி வழியாக சிறப்பு பேட்டியளித்த அவர், சீனா முதலீடு செய்வதை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த முதலீடுகள், அமெரிக்காவுக்கு புதிய உற்பத்தி பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களைக் கொண்டு வரும் அதே வேளையில், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இவ்விரு நாடுகள் தாராள வர்த்தகம் மற்றும் முதலீட்டு புழக்கத்தை தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.