உலகச் சுகாதார அமைப்பின் செயற்குழுவின் கூட்டத்தொடர்
2021-01-19 11:37:42

உலகச் சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 148ஆவது கூட்டத் தொடர் 18 ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தெட்ரோஸ், உலகின் பல்வேறு நாடுகளும் சமத்துவமுறையில் புதிய ரக கரோனா தடுப்பூசிகளைப் போடும் பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தவிரவும், ஓராண்டாகத் தொடர்ந்து வரும் கரோனா வைரஸ் தொற்றினால்,  உலகச் சுகாதார அமைப்பும் அதனைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளும் இச்சம்பவத்திலிருந்து மூன்று படிப்பினைகளைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் படிப்பினைகள் நோய் தொற்றுக்கான முன்னேற்பாடு மற்றும் சமாளிப்பு, மனிதர், விலங்கு மற்றும் பூமி இடையேயான உறவு, உலகச் சுகாதார அமைப்பின் ஆக்கப்பணியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்தார்.