சீனா ஈர்த்த அன்னிய முதலீடு அதிகரிப்பு
2021-01-20 19:09:48

கடந்த ஆண்டு புதிய ரக கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட பாதிப்பை சீனா வெற்றிகரமாக சமாளித்து, உலகளவில் நாடு கடந்த நேரடி முதலீட்டுத் தொகை பெருமளவில் சரிவடைந்த பின்னணயில், சீனா உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனா ஈர்த்த மொத்த அன்னிய முதலீட்டுத் தொகை, அன்னிய முதலீட்டு அதிகரிப்பு விகிதம், உலகின் மொத்த அன்னிய முதலீட்டில் சீனாவின் அன்னிய முதலீடு வகிக்கும் விகிதாசாரம் ஆகியவை உயர்ந்துள்ளது என்றும் சீன வணிக அமைச்சகம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு, சீனாவின் வட கிழக்கு பகுதி, மத்திய பகுதி மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சில மாநிலங்கள் ஈர்த்த அன்னிய முதலீட்டுத் தொகை தெள்ளத்தெளிவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.