2021- இன் முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
2021-01-20 10:20:11

2021- இன் முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா_fororder_1127001775_16110797047761n

சீனாவின் சி சாங் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து ஜனவரி 20ஆம் நாள்  0:25 மணிக்கு, லாங்மார்ச்- 3 பி ஏவூர்தி மூலம் தியன் டோங்1 - 03 எனும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது, அச்செயற்கைகோள் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுவட்ட பாதைக்குள் இயங்கத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டில் சீனாவின் விண்வெளித் துறையில் முதல்முதலாக செலுத்தும் பணி வெற்றிகரமாக தொடங்கியதை இது குறிக்கிறது.

சீனா விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைக்கோளானது,  சீனா மற்றும் அதற்கு அருகிலுள்ள பிரதேசங்கள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா முதலியவற்றுக்கு நகரும் தொலைத் தொடர்புச் சேவையை அளிக்கும்.