ரஷியா மற்றும் வெனிசூலா மீதான அமெரிக்காவின் புதிய தடைகள்
2021-01-20 10:35:49

அமெரிக்க அரசு 19ஆம் நாள் ரஷ்யா மற்றும் வெனிசூலா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

நார்த் ஸ்டீம் 2 என்ற கடலடி எரிவாயு குழாய் திட்டக் கட்டுமானத்தில் பங்கெடுத்துள்ள ரஷிய நிறுவனம் ஒன்றின் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது போன்றே, வெனிசூலாவின் எண்ணெய் தொழில் மீதான  அமெரிக்காவின் தடைகளைத் தவிர்ப்பதற்கு உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டின் பல நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீது தடை விதித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.