அமெரிக்க புதிய அரசு மீது சீனாவின் விருப்பம்
2021-01-20 20:41:51

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிய போதிலும், பரந்துபட்ட பொது நலன்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. அமெரிக்காவின் புதிய அரசு சீனாவுடன் இணைந்து ஒரே திசையை நோக்கி காலடி எடுத்து வைக்க வேண்டும் என சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங் அம்மையார் 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிறந்த சீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இது சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.